தேடுதல்

மனிதனுக்கு ஓய்வு விவிலியத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது மனிதனுக்கு ஓய்வு விவிலியத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது  (AFP or licensors)

தடம் தந்த தகைமை - ஓய்வுநாள் மனிதருக்கானது

மனிதத்தையும், மனித மாண்புகளையும் பின்னுக்குத் தள்ளி மனிதாபிமானத்தை மரணிக்கச் செய்யும் சட்டங்கள் அனைத்தும் மண்ணாங்கட்டிக்கு ஒப்பானவை.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

“ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை. ஆதலால் ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே” என்றார் இயேசு (மாற் 2:27-28).

உடல், உள்ள ஓய்வுக்காக ஏற்படுத்தப்பட்ட ஓய்வு நாள் அதன் உள்நோக்கங்களைத் தொலைத்து ஆதிக்கவாதிகளின் அதிகாரச் செலுத்துதலின் நாளாக உருமாற்றப்பட்டது. எந்த ஒரு சட்டமானாலும் அது சமூகத்தில் வாழும் மனிதருக்கு உதவுவதாக, வழிகாட்டுவதாக, பாதுகாப்பு வழங்குவதாக, உரிமைகளை நிலைநாட்டுவதாக இருக்க வேண்டும். அதேவேளையில் சட்டத்தின் பெயரால் சமூக நீதி மிதிபடுகையில், மனித மாண்பு மாய்கையில் அச்சட்டம் குப்பைத் தொட்டிக்குள் இட வேண்டியதே.

இஸ்ரயேல் மக்களிடையே எழுந்த ஓய்வு நாள் கடைபிடித்தலே ஓய்வு ஆண்டு, யூபிலி ஆண்டு (லேவி 25) என நீண்டது. இவை நல்லெண்ணங்களை உள்ளடக்கிய நன்முயற்சிகள். ஏழையரின் வாழ்வு மீட்டல். நாளடைவில் இந்நற்பார்வை நலிந்து ஓய்வு நாள் வெறும் சட்ட நாளாக்கப்பட்டது. இதனால் மனிதமும், மனித மாண்புகளும் பின்னுக்குத் தள்ளப்பட்டன. மனிதாபிமானத்தை மரணிக்கச் செய்யும் சட்டங்கள் எதுவும் மண்ணாங்கட்டிக்கு ஒப்பானது.

இந்த உலகில் நல்லது, கெட்டது என்பதெல்லாம் நமது எண்ணங்களைப் பொறுத்ததே.

இறைவா! சட்டப் பார்வையை விட்டுவிட்டு நேயப் பார்வையோடு வாழ வரம் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 April 2024, 17:35