தேடுதல்

உரோம் பம்பினோ ஜெசு என்னும் குழந்தை இயேசு மருத்துவமனையில் கர்தினால் பரோலின் உரோம் பம்பினோ ஜெசு என்னும் குழந்தை இயேசு மருத்துவமனையில் கர்தினால் பரோலின் 

எதிர்நோக்கு நமக்குள் வாழ்ந்து வளரட்டும் கர்தினால் பரோலின்

நமது பல எதிர்நோக்குகள் ஏமாற்றம் தருபவைகள் போன்று காட்சியளித்தாலும் இயேசு என்னும் எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது - கர்தினால் பரோலின்

மெரினா ராஜ் - வத்திக்கான்

வரவிருக்கும் யூபிலி ஆண்டு அனைவருக்கும் எதிர்நோக்கின் பகுதியாக இருக்கட்டும் என்றும், எதிர்நோக்கு உங்களுள் வாழ்ந்து உறுதியுடன் வளரட்டும் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் பியத்ரோ பரோலின்.

டிசம்பர் 20 வெள்ளிக்கிழமை உரோமில் உள்ள பம்பினோ ஜெசு என்னும் குழந்தை இயேசு மருத்துவமனைக்குச் சென்று அங்குள்ளவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி உரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின்.

ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு முன்பு குழந்தை இயேசு மருத்துவமனைக்குச் சென்று அங்குள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் மற்றும் குடும்பத்தினரை சந்திப்பதை வழக்கமாகக் கொண்ட கர்தினால் பரோலின் அவர்கள், அங்குள்ள சிற்றாலயத்தில் அவர்களுக்கு திருத்தந்தை சார்பாக கிறிஸ்துபிறப்பு வாழ்த்து கூறி உரையாற்றினார்.

புனித ஆண்டு எதிர்நோக்கின் காலமாக இருக்க வேண்டும், "நம்பிக்கையின் இடமாகிய குழந்தை இயேசு மருத்துவமனையில் "நல்வாழ்வு மற்றும் இயல்பு வாழ்வு தொடரும் என்று தான் நம்புவதாக எடுத்துரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், நோயினால் துன்புறும்  மக்கள் இங்கு நன்கு பராமரிக்கப்படுகின்றார்கள் என்றும் கூறினார்.

நமது பல எதிர்நோக்குகள் ஏமாற்றம் தருபவைகள் போன்று காட்சியளித்தாலும் இயேசு என்னும் எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது என்றும், கடவுளின் வார்த்தைகளையும் அவர் நமக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும் நம்பி வாழவேண்டும் என்றும் வலியுறுத்திய கர்தினால் பரோலின் அவர்கள், துன்புறுபவர்கள், கடினமான சூழல்களில் வாழ்பவர்கள் நமது அன்பிற்கு உரியவர்கள் அனைவர் மேலும் எதிர்நோக்கின் ஆற்றல் நிலைத்திருக்க வாழ்த்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 December 2024, 15:43