திருத்தந்தையின் வருகைக்கான தயாரிப்பில் Ajaccio நகரத்தார் திருத்தந்தையின் வருகைக்கான தயாரிப்பில் Ajaccio நகரத்தார்  (AFP or licensors)

செபம், நீதி உரையாடலை வலியுறுத்தும் திருத்தூதுப் பயணம்

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயர்கள் கலந்துகொள்ளும் மத்தியதரைக் கடலில் நடைபெறும் மதங்களுக்கான மாநாட்டின் நிறைவு கூட்டத்தில் பங்குபெறுவதற்கான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூதுப்பயணம், உரையாடல் மற்றும் ஒற்றுமைக்கான ஒரு தனித்துவமான வாய்ப்பு - கர்தினால் பரோலின்

மெரினா ராஜ் - வத்திக்கான்  

தங்கள் உயிரைப் பணயம் வைத்து, சிறந்த எதிர்காலத்தை தேடுபவர்களுக்கு, நமது கடல் என்பது கல்லறையாக ஒருபோதும் இருக்கக்கூடாது என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது 47ஆவது திருத்தூதுப்பயணத்தின்போது மீண்டும் உறுதி செய்வார் என்று தான் நம்புவதாக எடுத்துரைத்தார் கர்தினால் பியத்ரோ பரோலின்.

டிசம்பர் 14 சனிக்கிழமை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது 47ஆவது திருத்தூதுப்பயணமாக கோர்சிகா என்னுமிடத்திற்குச் செல்ல இருக்கும் நாளின் முதல் நாளன்று வத்திக்கான் வானொலிக்கு அளித்த நேர்காணலின்போது இவ்வாறு கூறினார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இந்த ஒருநாள் திருத்தூதுப்பயணமானது 12 மணி நேரத்திற்கும் குறைவான பயணமாக இருந்தாலும், செபம், நீதி, உரையாடல் போன்றவற்றை அதிகம் வலியுறுத்தும் ஒரு பயணமாக இருக்கும் என்றும், சந்திப்பு, உரையாடல், கிறிஸ்தவம், சான்றுவாழ்வு மதங்களின் அழகு, வரவேற்பு, படைப்பிற்கான அக்கறை போன்றவற்றை எடுத்துரைக்கும் பயணமாக இருக்கும் என்றும் கூறினார் கர்தினால் பரோலின்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயர்கள் கலந்துகொள்ளும் மத்தியதரைக் கடலில் நடைபெறும் மதங்களுக்கான மாநாட்டை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் டிசம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்வார் என்று எடுத்துரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், உரையாடல் மற்றும் ஒற்றுமைக்கான ஒரு தனித்துவமான வாய்ப்பு இத்திருத்தூதுப் பயணம் என்றும் எடுத்துரைத்தார்.

கிறிஸ்தவர்களின் வாழ்க்கை மற்றும் உலகின் சான்று வாழ்வில் பொறுமை, நீதி மற்றும் இரக்கத்துடன் நடந்துகொள்வது மிக முக்கியம் என்றும், பொறுப்புடைமை என்பது ஒரு புதிய வாழ்க்கை, சமுதாயம் மற்றும் உலகத்தில் மாற்றத்தை, அதிசயத்தை" கொண்டு வருவதற்காக, வரவிருக்கும் இறைவனை நோக்கி நம்மை வழிநடத்த வேண்டும் என்றும் கூறினார் கர்தினால் பரோலின்.

அமைதியின் இளவரசராம் இயேசு கிறிஸ்துவின் பிறப்பானது உலகின் தற்போதைய சூழ்நிலையில், நிச்சயமாக அமைதி என்பது ஒரு மேலாதிக்க சிந்தனையாக இருக்கும் என்பதை எடுத்துரைக்கின்றது என்றும், திருத்தந்தை தனது திருத்தூதுப் பயணத்தில் தனக்கு முன்னால் இருக்கும் மக்களின் வரலாறு, அவர்கள் பொதிந்துள்ள கலாச்சாரம் ஒவ்வொருவரும் தன் இதயத்தில் சுமந்து கொண்டிருக்கும் கேள்விகள், நம்பிக்கைகள் மற்றும் துன்பங்கள் ஆகியவற்றில் குறிப்பாக கவனம் செலுத்துகிறார் என்றும் எடுத்துரைத்தார்.

நம் அனைவரின் சிறந்த அணுகுமுறை, நம் விருப்பத்திற்கு ஏற்ப எதையாவது "எதிர்பார்ப்பது" அல்ல, மாறாக திருத்தந்தையின் வார்த்தையை வரவேற்பது என்றும், நமக்கு உதவ அனுமதிக்கும் வகையில் அவரது குரலுக்கு செவிசாய்ப்பது என்றும் கூறினார் கர்தினால் பரோலின்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 December 2024, 15:02